மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி ஆலோசனைக் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட பத்து ரூபாய் இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேகதாது அணை கட்டும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பத்து ரூபாய் இயக்கத்தின் பொதுச் செயலாளர் நல்வினை விஸ்வராஜ் சிறப்புரையாற்றினார்.
மாநில செயலாளர் டாக்டர் K. சதீஸ்குமார் வரவேற்புரை வழங்கினார்.
மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் K. சீனிவாசன், M. டேவிட்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள AKT மினி ஹாலில் கூட்டம் நடைபெற்றது.
மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி ஆலோசனைக் கூட்டம்
