கரூரில் பெண்ணுக்கு சிக்கலான முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை வெற்றி. .
கரூர் மாவட்டத்தில் கோவை சாலையில் அமைந்துள்ள நாச்சிமுத்து மருத்துவமனையில் 36 வயது பெண்ணுக்கு சிக்கலான முதுகுத்தண்டு மற்றும் கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சந்தா மொண்டல் என்ற பெண்ணுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக கை, கால்களில் படிப்படியான பலவீனம் மற்றும் உணர்வின்மை ஏற்பட்டு கடந்த 3 மாதங்களாக நடப்பதிலும் சிரமம் இருந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அதன்படி
பரிசோதனையில் Craniovertebral Junction பகுதியில் பாதிப்பு, Cervical Myelopathy மற்றும் C1-C2 பகுதியில் Atlanto-Axial Dislocation உள்ளிட்ட சிக்கலான பாதிப்புகள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, C1-C2 பகுதியில் முதற்கட்ட சிகிச்சையும், பின்னர் Posterior Stabilisation and Fusion அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது கரூர் நாச்சிமுத்து மருத்துவ மனையில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு நலமுடன் இருப்பதுடன் கை, கால்களின் இயக்கத்திலும் முன்னேற்றம் காணப்படுவதாக நாச்சிமுத்து மருத்துவமனையினர் தெரிவித்தனர்.
இந்த சிகிச்சையை முதுகுத்தண்டு மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர். குருசாமி நாச்சிமுத்து தலைமையிலான மருத்துவக் குழுவினர் மேற்கொண்டனர் என கூறினர். உடன் மருத்துவமணையின் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்
முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை வெற்றி..
